விவசாயிகளுக்கான திட்டத்தில் தோல்வி: அரசாங்கத்திற்கு விழுந்த பேரிடி
நிர்ணய விலையில் நெல் கொள்முதல் செய்வதற்காக நெல் சந்தைப்படுத்தல் சபையின் (PMB) சேமிப்பு வசதிகள் திறந்திருந்தாலும் விவசாயிகள் அரசாங்கத்திற்கு நெல்லை வழங்க தயக்கம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
விவசாயிகள் பலரும் அதிக விலைகளை வழங்கும் தனியார் ஆலைகளுக்கு தங்கள் நெல்லை விற்க தொடங்கியுள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
தனியார் வியாபாரிகளுக்கு விற்பனை
அரசாங்கம் வழங்கிய விலையை விட அதிக விலைக்கு தனியார் வியாபாரிகளுக்கு நெல் கையிருப்பு விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாக அம்பாந்தோட்டை நெல் சந்தைப்படுத்தல் சபையின் மேலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அதிக ஈரப்பதம் இருந்தபோதிலும் தனியார் வியாபாரிகள், கிலோவிற்கு ரூ. 120 பண்ணை விலையை வழங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறைந்தபட்ச விலை
அத்தோடு, அரசாங்கத்திற்கு நெல்லை வழங்கும் போது, தங்களே நெல்லை உலர்த்தி சந்தைப்படுத்தல் சபைகக்கு கொண்டு செல்ல வேண்டுயுள்ளதாவும், அதில் போக்குவரத்து செலவுகளும் உள்ளடக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறானதொரு பின்னணியில், நெல்லுக்கான குறைந்தபட்ச விலையை அதிகரிக்கக் கோரி விவசாயிகள் அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)