மூதூரில் வீதியை புனரமைத்து தருமாறு கோரி போராட்டத்தில் குதித்த விவசாயிகள்!
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மல்லிகைத்தீவு - சிறுக்குளம் விவசாய வீதியை புனரமைத்துத் தருமாறு வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
சிறுக்குளம் வீதியில் இன்று சனிக்கிழமை (24) காலை குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
இதன்போது கவனயீர்ப்பில் ஈடுபட்ட விவசாயிகள் விவசாய, “பொருட்களை கொண்டு செல்ல முடியவில்லை“, “அதிகாரிகளே எமது விவசாயிகளின் துயரத்தை புரிந்து கொள்ளுங்கள்“, “விவசாயம் நாட்டின் முதுகெலும்பு“, “விவசாய வீதியை புனரமைப்பது அவசியம்“, “விவசாயிகளின் போக்குவரத்து பிரச்சினைக்கு உடனடி தீர்வு வேண்டும்“ உள்ளிட்ட சுலோகங்களை ஏந்தியவாறு கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
சுமார் 3000 ஏக்கர் வயல் நிலங்களுக்கு செல்லும் மல்லிகைத்தீவு - சிறுக்குளம் வீதி நீண்ட காலமாக புனரமைப்பு செய்யப்படாமல் உள்ளது.

இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவித்தும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என்றும் அரசாங்கம் மூதூர், மல்லிகைத்தீவு - சிறுக்குளம் வீதியை புனரமைத்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |