இரண்டு பிள்ளைகளின் தந்தைக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை
44 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றினால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
123 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் கடத்தல் ஆகிய குற்றங்களுக்காக அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டது.
மஹரகம, தம்ம மாவத்தையை சேர்ந்த துசித குமார சதரசிங்க என்பவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பு
2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம் திகதி காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மஹரகம பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 123 கிராம் ஹெரோயினுடன் இவர் கைது செய்யப்பட்டார்.
அவரது முச்சக்கரவண்டியின் இரகசியப் பெட்டியில் இலத்திரனியல் தராசு மற்றும் இரண்டு உயிருள்ள தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டமை விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
நீதிபதியின் அறிவிப்பு
நீண்ட விசாரணையின் பின்னர் தீர்ப்பை அறிவித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன, குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ள குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
அதன்படி அவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாக நீதிபதி அறிவித்திருந்தார்.
