வீட்டை சுத்தப்படுத்தியபோது கிடைத்த தந்தையின் வங்கி புத்தகம் : இளைஞரான மகனுக்கு அடித்த அதிஷ்டம்
இளைஞர் ஒருவர் தன்னுடைய வீட்டை சுத்தப்படுத்தும் போது காலம் சென்ற அப்பாவின் பழைய வங்கி புத்தகம் கிடைத்ததாகவும் அதன் மூலம் சட்ட போராட்டத்தில் வென்று தற்போது கோடீஸ்வரர் ஆகியுள்ளதாகவும் வெளியாகி இருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் சிலி(chile) நாட்டில் இடம்பெற்றுள்ளது.
வீட்டை சுத்தப்படுத்திக் கொண்டிருக்கும் போது தனது தந்தையின் வங்கி புத்தகத்தை அந்த இளைஞர் பார்த்தார். முதலில் அதை அவர் ஆர்வத்துடன் பார்க்காத நிலையில் அதன் பின்னர் அதிலிருந்த தொகையை பார்த்ததும் அவர் ஆச்சரியமடைந்தார்.
வீடு கட்டுவதற்காக தந்தை சேமித்து வைத்த தொகை
வீடு கட்டுவதற்காக தந்தை சேமித்து வைத்த தொகை அதிலிருந்து தெரியவந்தது. இதனை அடுத்து அவர் வங்கி நிர்வாகத்திடம் சென்று கேட்டபோது வங்கி நிர்வாகம் அந்த பணத்தை கொடுக்க மறுத்தது. போதுமான ஆவணங்கள் வேண்டும் என்று கூறியது.
இதனை அடுத்து நீதிமன்றத்தில் அந்த இளைஞர் வழக்கு தொடர்ந்த நிலையில் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து புத்தகத்தில் உள்ள தொகைக்கு உரிய வட்டியுடன் அந்த இளைஞருக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனை அடுத்து அந்த இளைஞருக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.10 கோடிக்கும் அதிகமாக கிடைத்தது.
சட்ட போராட்டம்
இந்த பணம் என்னுடைய அப்பாவின் பணம், அவர் எனக்காக சேர்த்து வைத்த பணம், எனவே தான் நான் சட்ட போராட்டம் நடத்தி இந்த வழக்கை வென்று உள்ளேன் என்று அந்த இளைஞர் தெரிவித்தார்.
பல வருடங்களுக்கு முன் அப்பா சேர்த்து வைத்த பணத்தால் தற்போது அவருடைய மகன் கோடீஸ்வரர் ஆகி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
