பாகிஸ்தானில் KFC உணவகங்கள் மீது சரமாரி தாக்குதல்
பாகிஸ்தானில் அமெரிக்க துரித உணவு சங்கிலியான KFC இன் உணவகங்கள் மீது பத்திற்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சர்வதேச நாடுகள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவிற்கு எதிரான வெறுப்புணர்வு மற்றும் அதன் நட்பு நாடான இஸ்ரேலின் காசா போருக்க்கான எதிர்ப்பு காரணமாக, KFCஉணவகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து, KFC உணவகங்கள் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பல நபர்களை பாகிஸ்தானிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பதிவான தாக்குதல்
இந்தநிலையில், தெற்கு துறைமுக நகரமான கராச்சி, கிழக்கு நகரமான லாகூர் மற்றும் தலைநகர் இஸ்லாமாபாத் உள்ளிட்ட இஸ்லாமிய நாட்டின் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள KFC துரித உணவகங்கள் மீது குறைந்தது 11 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல்கள் தொடர்பில் இந்த வாரம் குறைந்தது 178 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
லாகூரில் பதிவான தாக்குதல் சம்பவங்களை தொடர்ந்து 27 KFC விற்பனை நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக பாகிஸ்தான் காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
