இனவெறிக்கு எதிராக மேலும் பல சட்டங்கள்: ஜனாதிபதி அநுர அதிரடி..!
மீண்டும் இனவாதம் தலை தூக்குவதற்கு இடமளிக்க மாட்டேன் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
தலவாக்கலையில் இன்று (19) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் ஒரு போர்
இனவெறியைத் தோற்கடிக்க தற்போதுள்ள சட்டங்கள் போதாது என்றால், புதிய சட்டங்கள் இயற்றப்படும் என்றும் அதன்போது அவர் வலியுறுத்தியுள்ளார்.
சிறுவர் தலைமுறை மீண்டும் ஒருபோதும் போருக்குச் செல்லாத ஒரு நாடு கட்டியெழுப்புவேன் எனவும் அனைவரின் உரிமைகளும் சமமாக நடத்தப்படும் ஒரு நாட்டை உருவாக்குவேன் என்றும் ஜனாதிபதி அநுர வலியுறுத்தியுள்ளார்.
மீண்டும் ஒரு அரசாங்கம்
அத்தோடு, இதற்குப் பிறகு, இந்த அரசாங்கத்தைத் தவிர வேறு எந்த அரசாங்கமும் மீண்டும் அமைக்கப்படாது என்றும் அந்த நபர்கள் அரசாங்கங்களை அமைக்க விரும்பினால், தாங்கள் செய்வதை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் தெற்கில் உள்ள அனைத்து மக்களின் பங்கேற்புடன் தாங்கள் அரசாங்கத்தை கட்டியெழுப்பியதாகவும் ஜனாதிபதி அநுர குமார மேலும் தெரிவித்துள்ளார்.
you may like this...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
