வளைகுடா போர்-3...! உலகின் மெகா எரி (பொருள்) நெருக்கடி
கறுப்புத்தங்கம் என்ற விளிப்புக்குரிய பெற்றோலியத்தின் விநியோக வரலாற்றில், தற்போது மூன்றாம் வளைகுடாப் போர் என்ற விளிப்பைப் பெற்ற மத்திய கிழக்கு போர் முக்கியப் பதிவை எதிர்மறையாக உருவாக்கியுள்ளது.
அந்த வகையில் உலகின் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட சீர்குலைவு நிலை வரலாற்றில் மிகப்பெரிய தாக்கமாக உருவாகியுள்ளதால் எண்ணெய் விலை உயர்ந்து வருகின்றது.
ஆனால் ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரும் என நேற்று திடீரென டொனால்ட் ட்ரம்ப் என்ற ஒற்றை மனிதர் குறிப்பிட்ட கருத்து, நேற்று 120 டொலர் என உச்சத்தில் இருந்த எண்ணெய் விலையைக் கடந்த 24 மணி நேரத்தில் அசாதாரணமான சரிவைக் காணவைத்து, இன்று 90 டொலருக்குக் கீழ் இறங்கவைத்துச் சிறிய ஆசுவாசத்தை வழங்கினாலும், உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு செல்லும் ஹோர்முஸ் நீரிணை வழியிலுள்ள கண்டம் இன்னும் தொடர்வதால், இந்த விலை உயர்வு வேதாளத்தை மீண்டும் முருங்கை மரத்தில் ஏற்றவைக்கும் என்பது புரிதலுக்கு உரியது.
தற்போதைய அமெரிக்க - இஸ்ரேலிய கூட்டணி எதிர் ஈரான் நீயா - நானா போட்டி, உலக எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீத வகிபாகத்தை அடிப்படுவதால், 1956 - 1957ஆம் ஆண்டில் ஏற்பட்ட சூயஸ் கால்வாய் நெருக்கடியின்போது ஏற்பட்ட நெருக்கடியை விட இரண்டு மடங்கு அதிகமாகத் தற்போதைய நெருக்கடி வந்துள்ளது.
ஏனெனில் 1950களில் ஏற்பட்ட சூயஸ் நெருக்கடியில் சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியன எண்ணெய் சந்தையிலிருந்து முற்றாகத் துண்டிக்கப்படவில்லை ஆனால் தற்போது அது நடந்துள்ளது.
இதனால்தான் ஈரான், ஹோர்முஸ் நீரிணையைத் தொடர்ந்தும் முடக்கினால் உலகின் எண்ணெய் சந்தைகளுக்குப் பேரழிவு ஏற்படக்கூடும் என இன்று சவூதியின் முக்கிய எண்ணெய் நிறுவனமான அரம்கோ எச்சரித்துள்ளது.
56 - 57 சூயஸ் கால்வாய் நெருக்கடி, 73 - 74 அரபு எண்ணெய் தடை, 79இல் நடந்த ஈரானியப் புரட்சி மற்றும் 90 - 91 வளைகுடாப் போர் ஆகிய காலப்பகுதிகளில் ஏற்பட்டதை விடப் பெரும் நெருக்கடியை உலக எண்ணெய் சந்தையில் உருவாக்கியுள்ளது.
உலக சக்திவளச் சந்தை இவ்வாறு கொதிநிலைக்குள் சென்ற வேளை பார்த்து, கொள்ளிக்கட்டையை எடுத்துத் தலையைச் சொறிவது போல, நாட்டின் மின்சாரத்துறையை மறுசீரமைக்கும் நகர்வுகளை எடுத்துச் சக்திவளத்துறை வேலைநிறுத்தங்களை வெடிக்கவைக்கும் நிலையில், இந்த விடயங்கள் அனைத்தையும் ஒருங்குசேரத் தருகிறது ஐபிசி தமிழின் செய்திவீச்சு...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |