தியாக தீபம் திலிபனின் நினைவேந்தல் ஊரெழுவில் அனுஸ்டிப்பு
Sri Lankan Tamils
Jaffna
By Theepan
தியாக தீபம் திலீபனின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு அவரின் பிறந்த மண்ணான யாழ். ஊரெழுவில் அமைந்துள்ள அவரது வீடு அமைந்திருந்த வளாகத்தில் நினைவு நிகழ்வுகள் நடைபெற்றன.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தீவக நினைவேந்தல் , குழு தாயக செயலணி போன்றனவற்றின் ஏற்பாட்டில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது.
அவ்விடத்தில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
அங்கு இருந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தீவக நினைவேந்தல் குழு தாயக செயலணி போன்றனவற்றின் ஏற்பாட்டில் ஊர்தி பவனிகள் இன்று (26) காலை யாழ்ப்பாணம் ஊரெழுவில் இருந்து யாழ் பலாலி வீதியின் ஊடாக நடைபவனியுடன் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபிக்கு கொண்டு செல்லப்பட்டன.






| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |