இரத்தினபுரியில் குடும்பத் தகராறில் பெண் அடித்து கொலை
Accident
Death
By Pavi
இரத்தினபுரி ரக்வான காவல் பிரிவுக்குட்பட்ட கண்டகும்புர பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் கொலை செய்யபட்டுள்ளார்.
உயிரிழந்தவர் கண்டகும்புர பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நேற்று (25.09.2026) இரவு பெண்ணை தடிக்கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஆரம்பகட்ட விசாரணை
இந்த விடயம் தொடர்பில் தெரியவருகையில், உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு முற்றியதன் காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கணவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ரக்வான காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |