சமஷ்டி முறையை ஏற்படுத்த இந்தியா தொடர்ந்து முன்வரவேண்டும்! கஜேந்திரகுமார் தரப்பு கோரிக்கை
தமிழ் மக்களுடைய அரசியல் உரிமையை பாதுகாக்க சமஷ்டி முறையை ஏற்படுத்த இந்தியா தொடர்ந்து முன்வரவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை (26) காந்தி பூங்காவில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் 39 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
ஆயுதவழி போராட்டம்
“தமிழர்களை பொறுத்த மட்டில் தமிழர்கள் 76 வருடங்கள் அடக்கு முறைக்கு முற்பட்டு தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இலங்கைக்கு அண்மையில் இருக்கும் பெரும் வல்லரசான இந்தியாவை நம்பி தமிழ் மக்கள் இந்த தீவில் வாழ்கின்றனர் என வலியுறுத்தி வந்துள்ளோம்.
இந்த வலியுறுத்தலின் உச்சக்கட்டம் தான் தியாக தீபன் அகிம்சை வழி போராட்டம். இந்த நிலையில் தமிழர்கள் தற்பாதுகாப்புக்காக ஆயுதவழி போராட்டம் செய்து கொண்ட போதும் இந்தியாவை முழுமூச்சாக நம்பினர்.
ஆனால் இந்தியா தனது பூலோக அரசியல் நலனுக்காக எங்கள் மக்களின் நலனை கருத்தில் கொள்ளாது எமது மக்களை காக்க தவறிவிட்டது.
இருந்தபோதும் நாங்கள் வடக்கு - கிழக்கில் தொடர்ந்து போராடி வருகிறோம்” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |