ட்ரம்ப் மீதான கொலை முயற்சி! அமெரிகாவில் வைத்து மொஜ்தபா குறித்து பெசெஷ்கியான் கருத்து
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை ஒருபோதும் கொலை செய்ய ஈரான் முயற்சிக்காது என ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றிய விடயம் குறித்து அமெரிக்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ட்ரம்பை கொலை செய்ய ஈரான் அரசு சதி செய்ததாக அமெரிக்க ஜனாதிபதியும் அமெரிக்க அதிகாரிகளும் முன்னதாக குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், பெசெஷ்கியானின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.
அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல்
ஈரானில் ஜனாதிபதியின் ஊடகத் தோற்றங்கள் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாக இருக்கும் நிலையில், அமெரிக்காவுடன் போர் நிலைமையில் உள்ள ஈரானின் ஜனாதிபதி, நியூயோர்க்கில் அமெரிக்க இரகசிய சேவை பாதுகாப்புடன் ஊடகவியலாளர்களை சந்தித்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் விளக்கியுள்ளன.

மேலும் கருத்து வெளியிட்ட பெசெஷ்கியான்,
“ ஈரான் தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்காது. அமெரிக்காவுடனான போர் நீடித்தாலும் தனது நாடு தலைவணங்காது.
போரின் தொடக்கத்திலிருந்து ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி பொதுவெளியில் காணப்படாத நிலையில், அவரது உடல்நிலை தொடர்பாக அண்மைக் காலங்களில் பல்வேறு ஊகங்கள் வெளியாகியிருந்தன.
அவரது தந்தையும் முன்னாள் உச்ச தலைவருமான அலி கமேனி பெப்ரவரி மாதம் இடம்பெற்ற அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவரது உடல்நிலை அல்லது உடல் தோற்றத்தில் குறிப்பிடத்தக்க பிரச்சினைகள் எதையும் நான் காணவில்லை. தங்களது கடைசி நேரடி சந்திப்பு சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் இடம்பெற்றது” என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |