ரஷ்யாவின் மிக பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது சக்திவாய்ந்த ட்ரோன் தாக்குதல்
தெற்கு ரஷ்யாவில் உள்ள ஒரு பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது உக்ரைனின் ஆளில்லா விமானங்கள் தாக்கியதில் தீ விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால் அந்நிறுவனம் தனது செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்யாவின் கருங்கடல் கடற்கரையோரப் பகுதியான கிராஸ்னோடர் கிராயில் உள்ள இல்ஸ்கி சுத்திகரிப்பு ஆலையை , தங்கள் படைகள் இரவோடு இரவாகத் தாக்கியதாக உக்ரைனின் பொதுப் படைத் தலைமையகம் இன்று தெரிவித்துள்ளது.
ட்ரோன்கள் தாக்குதல்
இந்த சுத்திகரிப்பு ஆலை அமைந்துள்ள பகுதியில் ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதை அப்பகுதி ஆளுநர் வெனியாமின் கொன்ட்ராடியேவ் உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியும் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளார்.
“ஒவ்வொரு நாளும், நமது மக்களுக்கும் நமது நாட்டிற்கும் எதிரான பயங்கரவாதச் செயல்களுக்காக ஆக்கிரமிப்பாளருக்கு நாம் பதிலடி கொடுக்கிறோம்,” என்று அவர் X தளத்தில் இது குறித்த காணொளியையும் பகிர்ந்திருந்தார்.
Every day, we respond to the aggressor for its terror against our people and our country. There are new results from our warriors’ long-range responses. Last night, the Ilsky Oil Refinery in the Krasnodar region was hit. Our long-range capabilities were also effective in the… pic.twitter.com/SUTIxAA4x2
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) September 26, 2026
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |