மொஜ்தபா கமெனிக்கு எதிராக ட்ரம்ப் எச்சரிக்கை! அச்சத்தை தூண்டும் தாக்குதல் திட்டம்
ஈரானின் உயரிய தலைவர் பதவியை அயத்துல்லா அலி கமெனியின் மறைவுக்குப் பிறகு ஏற்க தேர்வு செய்யப்பட்ட மொஜ்தபா கமெனி “அமைதியாக வாழ முடியாது” என தான் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர் கூறிய இந்த கருத்தின் சரியான பொருள் என்ன என்பது தெளிவாகவில்லை என சர்வதேச அரசியல் ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஈரானின் அடுத்த உயரிய தலைவராக மொஜ்தபா கமெனிதேர்வு செய்யப்பட்டதைப் பற்றி தாம் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
முந்தைய பிரச்சினை
அந்த தேர்வு நாட்டுக்கு முந்தைய பிரச்சினைகளையே தொடரச் செய்யும் என்று நாங்கள் நினைக்கிறோம். அதனால் அவர்களின் தேர்வை பார்த்ததில் நான் ஏமாற்றமடைந்தேன் என்றும் கூறியுள்ளார்.

மொஜ்தபா கமெனி மீது தாக்குதல் அபாயம் உள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்ட போது, அதைப் பற்றி தாம் கூற விரும்பவில்லை என ட்ரம்ப் பதிலளித்துள்ளார்.
“அதைப் பற்றி பேசுவது பொருத்தமல்ல. ஆனால் பாருங்கள், என்னுடைய மீதும் முன்பு இலக்கு வைத்திருந்தார்கள்,” என்று அவர் கூறியுள்ளார்.
இதே நேரத்தில், ஈரான் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் வாய்ப்பு இன்னும் திறந்திருக்கிறது என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆனால் எந்த நிபந்தனைகளில் என்பது முக்கியம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் மொஜ்தபா கமெனி குறித்தும் ஈரானின் அமைதி குறித்தும் இதன்போது அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |