கனடா செல்லும் மாணவர்களுக்கு பேரிடியான தகவல்
கனடாவுக்கு (Canada) கல்வி கற்கச் செல்லும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைவடைந்து வருவதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேபோல் கல்வி கற்க அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவுக்குச் (UK) செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நாடுகளில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விதிக்கப்படும் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளே இந்நிலைக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலப்பெயர்பவர்களின் எண்ணிக்கை
இதேவேளை, கனடாவிற்குள் புதிதாக புலப்பெயர்பவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அந்நாடு தனது குடிவரவு விதிகளை கடுமையாக்கி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்தவகையில் கடந்த ஆண்டில் 2.35 மில்லியன் தற்காலிக விசா விண்ணப்பங்களை கனடா நிராகரித்துள்ளதக தெரிவிக்கப்படுகின்றது.
நிராகரிக்கப்பட்ட 2.35 மில்லியன் விசாக்களில் 1.95 மில்லியன் விசாக்கள் பயண விசாக்கள் ஆகும்.
கோவிட் பரவலுக்கு பின்னர் அதிகரித்து வரும் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள வீடுகள், சுகாதாரம் மற்றும் பொதுச் சேவைகள் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்காகவே விசாக்கள் நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
