மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றம்...! கவலை வெளியிட்டுள்ள இலங்கை
மத்திய கிழக்கு மற்றும் மேற்கு ஆசியாவில் வேகமாக அதிகரித்து வரும் சூழ்நிலை குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், குறித்த நடவடிக்கைகள் பொதுமக்கள் வாழ்விற்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
உயிரிழப்புகள்
அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பொதுமக்களின் உயிரிழப்புகள் குறித்து இலங்கை வருத்தமடைவதுடன், பொதுமக்கள் மற்றும் பொது உள்கட்டமைப்புகளுக்கு எதிரான எந்தவொரு தாக்குதலையும் கண்டிப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், அனைத்துத் தரப்பிலும் உள்ள பொதுமக்களைப் பாதுகாப்பது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் ஓர் அடிப்படைக் கடமையாகும் என்பதை வெளிவிவகார அமைச்சு கோடிட்டுக் காட்டியுள்ளது.

அத்தோடு, மனித உயிர்களின் புனிதத்தன்மை மற்றும் உலகளாவிய அமைதியை நிலைநாட்டுவதில் எமது அர்ப்பணிப்பில் நாங்கள் உறுதியாக நிற்கிறோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான மனிதாபிமான நெருக்கடி மற்றும் உலகப் பொருளாதாரம் மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் அதன் நேரடித் தாக்கம் அனைத்து நாடுகளிலும் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் நிலைமைகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது எனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |