யானைகளுக்கு உணவு வழங்குபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை - வனவளத் திணைக்களம் எச்சரிக்கை

Sri Lanka Elephant
By Sathangani Jul 27, 2023 06:42 AM GMT
Report

சிறிலங்காவில் வனப்பகுதியில் அல்லது வீதி ஓரங்களில் சுற்றித்திரியும் காட்டு யானைகளுக்கு உணவு வழங்குபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இது தாவர பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் குற்றமாகும் எனவும் சிறிலங்கா வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

வனப்பகுதிகளி்ல் அல்லது நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் செல்வோர், சாலை ஓரங்களில் சுற்றித்திரியும் காட்டு யானைகளுக்கு உணவு அளிப்பதால், விலங்குகள் சாலைக்கு வருவது வழக்கமாகியுள்ளது.

 7 மாதங்களில் 36 யானைகள் உயிரிழப்பு

யானைகளுக்கு உணவு வழங்குபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை - வனவளத் திணைக்களம் எச்சரிக்கை | Feed Wild Elephants In Road Legal Action Sl

இதனால் அந்த வீதிகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு இடையூறாக யானைகள் உணவு பெறும் சம்பவங்கள் கடந்த காலங்களில் அடிக்கடி இடம்பெற்று வருகின்றன.

எனவே, வனப்பகுதிகளை கடந்து செல்லும் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது வன விலங்குகளுக்கு உணவளிப்பதை தவிர்க்குமாறு வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே, அனுமதியற்ற மின்கம்பிகளில் மோதி கடந்த 7 மாதங்களில் 36 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. அதாவது வன விலங்குகளிடம் இருந்து விவசாய நிலங்களையும் சொத்துக்களையும் பாதுகாப்பதற்காக சிலர் பாதுகாப்பற்ற மின் கம்பிகளை அமைத்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

முறையற்ற மின்வேலி

யானைகளுக்கு உணவு வழங்குபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை - வனவளத் திணைக்களம் எச்சரிக்கை | Feed Wild Elephants In Road Legal Action Sl 

வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் யானைகள் கிராமங்களுக்குள் அத்துமீறி நுழைவதைத் தடுக்கும் வகையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குறிப்புகளின்படி மின்வேலிகளை அமைக்கிறது.

அந்த முறையின்றி சிலரால் அமைக்கப்பட்டுள்ள அங்கீகரிக்கப்படாத மின் கம்பிகளால் யானைகள் உயிரிழப்பதாகச் செய்திகள் வருகின்றன.

எனவே தனியார் மின்வேலி அமைக்கும் பட்சத்தில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமையவே அதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவ்வாறு அமைக்காத மின்வேலிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.



ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025