பணி இடத்தில் தகராறு- பெண் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர் வெட்டிக் கொலை
Attempted Murder
Sri Lanka
Sri Lanka Police Investigation
Crime
By Sumithiran
தங்காலை பிரதேசத்தில் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தராக கடமையாற்றும் 30 வயதுடைய பெண் ஊழியர் இன்று காலை பணி தொடர்பான தகராறில் கோரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
தனது வீட்டில் இருந்து களப்பணிக்காக சென்று கொண்டிருந்த போது வெலியார பிரதேசத்தில் வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறையினர் மேலதிக விசாரணை
உயிரிழந்த பெண், வெலியார நெதோல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த திருமணமானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொலையை செய்த சந்தேக நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தங்காலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி