வவுனியாவில் கடத்தப்பட்ட பெண்!! திரைப்பட பாணியில் காப்பாற்றிய காவல்துறை
Sri Lanka Police
Vavuniya
Sri Lanka Police Investigation
By Kanna
வவுனியா – பூவரசங்குளம் பகுதியில் பெண்ணொருவரை கடத்தி, கப்பம் கோரிய குற்றச்சாட்டில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பூவரசங்குளம் – வாரிக்குட்டியூர் பகுதியில் பெண்ணொருவர் கடத்தி செல்லப்பட்டு, கப்பம் கோரப்பட்டு வருவதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டிற்கு அமையவே, இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடத்திச் செல்லப்பட்ட பெண்ணை விடுவிப்பதற்கு ஐந்து லட்சம் ரூபா கப்பம் கோரப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு கோரப்பட்ட பணத்தை வழங்கும் வகையில், கடத்திச் செல்லப்பட்ட பெண்ணின் மகளை காவல்துறையினர் அனுப்பியுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடனும் ஏனைய செய்திகளுடனும் வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு.

