யாழ். மாநகர சபை அமர்வை முகநூலில் ஒளிபரப்பிய சைக்கிள் உறுப்பினர்

Jaffna Sri Lanka Politician Local government Election
By Thulsi Jul 17, 2025 01:36 AM GMT
Report

யாழ். மாநகர சபை (Jaffna Municipal Council) அமர்வை முகநூல் ஊடாக நேரலையில் ஒளிபரப்பிய உறுப்பினர் ஒருவருக்கு மாநகர முதல்வரால் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

யாழ். மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் (16.07.2025) முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா தலைமையில நடைபெற்றது.

மாநகர சபை உறுப்பினர்களிடையே விவாதம் நடைபெற்ற நிலையில் சபை அமர்வில் பங்கேற்ற அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் இரத்தினம் சதீஸ் வெளியே சென்று பார்வையாளர் பகுதியில் இருந்து மாநகர சபை அமர்வை முகநூல் ஊடாக நேரலையில் ஒளிபரப்பினார்.

யாழ். கச்சேரி பகுதியில் தொடருந்து மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழ். கச்சேரி பகுதியில் தொடருந்து மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு

மன்னிப்பு வழங்குங்கள்

இதனை அவதானித்த ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் மாநகர சபை உறுப்பினர் ப. தர்சானந் குறித்த விடயம் தொடர்பாக மாநகர முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.

யாழ். மாநகர சபை அமர்வை முகநூலில் ஒளிபரப்பிய சைக்கிள் உறுப்பினர் | Jaffna Mc Meeting Broadcasted On Fb By Member

சபை ஒழுங்கு விதிகளுக்கு மாறாக உறுப்பினர் செயல்பட்டமையால் சபை அமர்வில் பங்கேற்க ஒரு மாதம் தடை விதிப்பது சம்பந்தமாக முதல்வர்  சபை உறுப்பினர்களின் ஆலோசனையை கேட்டார்.

இதன்போது எழுந்த ஈ. பி. டி. பி. உறுப்பினர் இளங்கோவன், “அவ்வாறு செய்த உறுப்பினர் புதியவர் என்பதால் மன்னிப்பு வழங்குங்கள்” என்று கோரினார்.

யாழ் சமூக செயற்பாட்டாளருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு விடுத்துள்ள அழைப்பு

யாழ் சமூக செயற்பாட்டாளருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு விடுத்துள்ள அழைப்பு

கடும் எச்சரிக்கை

ஏனைய கட்சிகளை சேர்ந்த சிலர் குறித்த உறுப்பினரிடம் தன்னிலை விளக்கம் கோர வலியுறுத்தினர்.

யாழ். மாநகர சபை அமர்வை முகநூலில் ஒளிபரப்பிய சைக்கிள் உறுப்பினர் | Jaffna Mc Meeting Broadcasted On Fb By Member

இதையடுத்து, சபா மண்டபத்துக்கு சென்ற உறுப்பினர் தான் ஓர் ஊடகவியலாளர் என்றும் அதனாலேயே நேரலை செய்தேன் என்று கூறினார்.

ஊடகவியலாளர்கள் இருக்கும் போது உறுப்பினர் அவ்வாறு செயற்பட்டமை தொடர்பாக கடும் எச்சரிக்கை விடுத்த மாநகர முதல்வர் இனிமேல் இவ்வாறு சபை அமர்வில் நடந்தால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்தார்.

இதைத் தொடர்ந்து சபை அமர்வு வழமை போன்று நடைபெற்றது.

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: கைதான காவல்துறை அதிகாரிக்கு பிணை

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: கைதான காவல்துறை அதிகாரிக்கு பிணை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       


ReeCha
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024