சூடானில் களேபரம்! இராணுவத்தினரால் கடத்திச் செல்லப்பட்ட பிரதமர்
Army
Sudan
Abdallah Hamdok
Under House Arrest
By Chanakyan
சூடான் பிரதமரின் இல்லம் அந்த நாட்டு இராணுவத்தினரால் முற்றுகையிடப்பட்டு, பிரதமர் அப்தல்லா ஹம்டோக் (Abdallah Hamdok) கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரதமரின் ஊடக ஆலோசகரின் இல்லம் அந்த நாட்டு இராணுவத்தினரால் தாக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடத்தப்பட்ட பிரதமர் அடையாளம் தெரியாத இடத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று உறுதிபடத் தெரிவித்துள்ளது.
அவருடன் சேர்த்து இன்னும் பல சிவிலியன்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கடத்தல் மற்றும் கைது நடவடிக்கையை கண்டித்து ஆங்காங்கே போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.