ரொனால்டோவின் முழுத் திறமையையும் வீணடித்துவிட்டார்கள் - ஆதரவுக்குரல் எழுப்பிய துருக்கிய அதிபர்!
உலகக் கிண்ண கால்பந்து தொடரில் போர்த்துக்கல் மற்றும் மொரோக்கோ அணிகள் காலிறுதிப் போட்டியில் விளையாடியிருந்தன.
இந்தப் போட்டியில் போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ இறுதி நேரத்தில் களமிறக்கப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்ததோடு, அவரது ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த விடயம் தொடர்பில் தற்போது துருக்கிய அதிபர் தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
துருக்கிய அதிபரின் கருத்துக்கள்
கிறிஸ்டியானோ ரொனால்டோவை காலிறுதிப்போட்டி முழுவதும் களம் இறக்காமல் வீணடித்து விட்டதாகவும், அரசியல் ரீதியாக அவரை பழிவாங்கல் செய்து முடக்கிவிட்டார்கள் என்றும் துருக்கிய அதிபர் ரிசெப் தயிப் எர்துவான் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், போட்டி நிறைவடைய குறைவான நேரங்களே உள்ள நிலையில் அவரை விளையாட அனுமதித்தது உளவியல் ரீதியில் அவருக்கு ஏற்படுத்திய தாக்கமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்திற்காக குரல் கொடுத்த ஒரு நல்ல மனிதரை அரசியல் ரீதியாக பழிவாங்கல் செய்து அவரின் முழுத் திறமையையும் வீணடித்துவிட்டார்கள் என ரொனால்டோவுக்கு ஆதரவாக தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
