மகளீர் உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி - மகிழ்ச்சியில் பிபா..!
ஒன்பதாவது மகளீர் உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி எதிர்வரும் ஜூலை 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
32 அணிகள் பங்கேற்கும் 9-வது மகளீர் உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டி அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் எதிர்வரும் ஜூலை 20 ஆம் திகதி முதல் ஒகஸ்ட் 20 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இந்த உலகக் கோப்பைக்கான பற்றுசீட்டு விற்பனை தொடர்பில் கடந்த வியாழன் அன்று பிபா(FIFA) அறிவித்தலொன்றை வெளியிட்டது.
1,003,000 பற்றுசீட்டுகள்
இது குறித்து சர்வதேச கால்பந்தாட்ட சங்க தலைவர் ஜியானி இன்பான்டினோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"இதுவரை 1,003,000 பற்றுசீட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இது கடந்த 2019 ஆம் ஆண்டு பிரான்ஸில் நடந்த உலக கிண்ண பெண்கள் கால்பந்தாட்ட போட்டியின் மொத்த பற்றுசீட்டு விற்பனையுடன் ஒப்பிடுகையில் அதிகமாகும்.
'இந்த விடயம் மகிழ்ச்சி அழிக்கிறது." என தெரிவித்துள்ளார்.
