எதிர்வரும் 14 ஆம் திகதிக்குப்பின்னர் வெடிக்கப்போகும் போராட்டம் : ரணில் எச்சரிக்கை
நவம்பர் 14 ஆம் திகதிக்கு பின்னர் எமது போராட்டம் ஆரம்பமாகும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) இன்று (9) தெரிவித்தார். டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக அனைத்து தொகுதிகளிலும் ஒரே நேரத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரசியல் சேறு பூசி தாம் எழுப்பும் உண்மையான பொருளாதார பிரச்சினைகளை மறைக்க முயல வேண்டாம் என தெரிவித்த ரணில் விக்ரமசிங்க, நாட்டுக்கு எதிர்காலம் வேண்டுமெனில் எரிவாயு சிலிண்டருக்கு வாக்களித்து அனுபவம் வாய்ந்த அணியை நாடாளுமன்றத்திற்கு அனுப்புமாறு கோருவதாக தெரிவித்தார்.
சில நாட்களில் புதிய நாடாளுமன்றம் தெரிவு செய்யப்படும்
இன்னும் சில நாட்களில் புதிய நாடாளுமன்றத்தை நாம் தெரிவு செய்யவுள்ளோம்.தனது கொள்கை என்ன என்பதை ஜனாதிபதி நாட்டுக்கு தெரிவிக்கவேண்டிய கடமை உள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்ன்னர் சர்வதேச நாணய நிதியத்துடனான(imf) உடன்படிக்கையை திசைகாட்டி நிராகரித்தது.ஆனால் தற்போது அந்த உடன்படிக்கையை செயற்படுத்துவது குறித்து ஐ எம் எவ் உடன் கலந்துரையாடி வருகிறது.
அரசின் எதிர்கால திட்டங்களை வெளிப்படுத்துங்கள்
இந்த உடன்படிக்கையில் ஏதாவது திருத்தம் உள்ளதா என்பது எமக்கு தெரியாது. எனவே ஐஎம் எவ் உடனான உடன்படிக்கை,அரசாங்கத்தின் கொள்கை மற்றும் அரசாங்கத்தின் எதிர்கால நிகழ்ச்சி நிரல் தொடர்பில் ஜனாதிபதி நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
இதைப் பற்றி அறிக்கை விடுவதற்குப் பதிலாக, பிறரைக் குற்றம் சாட்டுவதும், அவதூறாகப் பேசுவதும்தான் ஜனாதிபதியின் கடமை என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |