பொதுத் தேர்தலில் வாக்களிக்க இருப்போருக்கு வெளியான முக்கிய தகவல்
வாக்காளர் அட்டை பெறாமல், வாக்காளர் பட்டியலில் பதிவு செய்திருந்தால், அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணத்தை எடுத்துச் சென்று வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இலங்கையின் 10வது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் நாளை மறுநாள் (14) நடைபெறவுள்ளது.
இந்த ஆண்டுக்கான தேர்தலில் 8,888 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன், தகுதியான வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 71 லட்சத்து 40,354 ஆகும்.
செல்லுபடியாகும் ஆவணங்கள்
இந்ந நிலையில், இதுவரையிலும் வாக்காளர் அட்டைய பெறாதவர்கள் பின்வரும் ஆவணங்களை பயன்படுத்தலாம்.
- தேசிய அடையாள அட்டை
- செல்லுபடியாகும் கடவுச்சீட்டு
- செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம்
- அரச சேவை ஓய்வூதிய அடையாள அட்டை
- வயது வந்தோர் அடையாள அட்டை
- தேசிய அடையாள அட்டை தகவலை உறுதிப்படுத்தும் கடிதம்
- மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டை
- ஏனைய நபர்களுக்கு தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டை
கண்காணிகப்பாளர்கள்
இதேவேளை, பொதுத்தேர்தலில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்ட காவல்துறையினர் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 64,000 ஆகும்.
மேலும், 2024 பொதுத் தேர்தலின் வாக்குப்பதிவை கண்காணிக்க உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பார்வையாளர்களும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |