ஈரான் போர் பதற்றம் : ஐக்கிய அரபு அமீரகத்தில் விழுந்து நொருங்கியது உலங்கு வானுர்தி
United Arab Emirates
Helicopter Crash
Iran-Israel War
Iran-US Conflict
By Sumithiran
தொழில்நுட்பக் கோளாறை அடுத்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் உலங்கு வானூர்தி விழுந்து நொருங்கியதில் ஆயுதப்படையைச் சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போருடன் தொடர்புடையதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தியாகிகளின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்
திங்கட்கிழமை சம்பவம் நடந்த நேரத்தில் கொல்லப்பட்ட இருவரும் "தங்கள் தேசிய கடமையைச் செய்து கொண்டிருந்தனர்" என்றும், "இரண்டு தியாகிகளின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்" என்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி