பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிப்பு குறித்து எடுக்கப்படவுள்ள தீர்மான
நாட்டில் எரிபொருள் மற்றும் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்துள்ள நிலையில், வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது.
இது குறித்த தீர்மானம் இன்று (23) எடுக்கப்படவுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆராய்வதற்காக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு இடையில்இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
அதிகரித்த எரிபொருள் விலை
எரிபொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதால், வெதுப்பக தொழில்துறையை முன்னெடுத்துச் செல்வதில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த கலந்துரையாடலைத் தொடர்ந்து, பாண் உள்ளிட்ட அனைத்து வெதுப்பக உற்பத்திப் பொருட்களினதும் திருத்தப்பட்ட புதிய விலைகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |