பாடகர் பிரியங்கர பெரேரா காலமானார்
சிங்கள மொழி, பாடகரும் நடிகருமான பிரியங்கர பெரேரா, உடல்நலக்குறைவு காரணமாக தனது 64 ஆவது வயதில் காலமானார்.
மறைந்த பிரியங்கர பெரேரா, பாடகர் மில்டன் பெரேராவின் மகனாவார்.
இதன்படி பிரியங்கர பெரேராவின் இறுதிச்சடங்குகள் நாளை (03) நடைபெறும் என அவரது குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அஞ்சலி
அவரது பூதஉடல் இன்று (02) பிற்பகல் பொரளை பகுதியில் உள்ள தனியார் மலர்சாலை ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

நீண்டகாலமாக நோயுற்றிருந்த பிரியங்கர பெரேரா, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (01) இரவு காலமானார்.
பிரியங்கர பெரேரா, பல பிரபல பாடல்களைப் பாடியுள்ளதுடன் ‘சுபுன் சந்தக்’, ‘சந்துன் கசே சமன் வலக்’, ‘சிக்குருலியா’, ‘அகாத சகராரே’ உள்ளிட்ட பிரபல பாடல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தார்.
பாடகராக மட்டுமன்றி நடிகராகவும் கலைத்துறையில் தனது பங்களிப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |