ஒமைக்ரோனை கட்டுப்படுத்த இதுவே இறுதி வழி! சுகாதார நிபுணர் வலியுறுத்து!
control
Hemantha Herath
omicron
final way
By Vanan
ஒமைக்ரோன் தொற்றுப் பரவலை சுகாதார முறைகளை சரியாகக் கைக்கொள்வதன் மூலம் மாத்திரமே கட்டுப்படுத்தமுடியும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் (Hemantha Herath) தெரிவித்தார்.
இது குறித்து கருத்து வெளியிட்ட அவர், மூன்றாவது தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவே மாற்று வழியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய நிலவரப்படி, நாட்டில் மேலும் 78பேர் ஒமைக்ரோன் தொற்றாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து இலங்கையில் இதுவரை ஒமைக்ரோனால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 283ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
