கனடாவில் அதிகரிக்கப்படவுள்ள அபராதத் தொகை: வெளியான தகவல்
Toronto
Canada
World
By Laksi
கனடாவின் ரொறன்ரோவில் வாகன தரிப்பு தொடர்பிலான 125 குற்றச் செயல்களுக்கான அபராதங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குற்றச் செயல்களுக்கான கட்டணங்களை உயர்த்துவது குறித்த தீர்மானத்திற்கு நகர நிர்வாகம் ஆதரவாக வாக்களித்துள்ளது.
குற்றச் செயல்கள்
தற்பொழுது அறவிடப்படும் அபராதத் தொகை மிகவும் குறைவானது என நகரசபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
சில வகை குற்றச் செயல்களுக்கான அபராதத் தொகை 50 டொலர்களினாலும், 30 டொலர்களினாலும் உயர்த்தப்பட உள்ளது.
அபராதம் அதிகரிப்பு
அநேகமான அபராதத் தொகைகள் பணவீக்கம் போன்ற காரணிகளைத் தாண்டி அதே நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக விரைவில் அபராதத் தொகை அதிகரிக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்