வெளிநாடொன்றில் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த இலங்கை பெண்!
Sri Lanka
By pavan
அபுதாபியில் உள்ள விருந்தகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
2021ஆம் ஆண்டு சுற்றுலா விசாவில் பணிக்காக அபுதாபி சென்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தின் போது மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.
வீட்டு வேலைக்காக சென்ற பெண்
இதேவேளை, அடுக்குமாடி கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து இலங்கை பெண் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மலேசியாவின் உள்ள உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஊடாக தகவல் கிடைத்துள்ளதாக காமினி செனரத் யாப்பா குறிப்பிட்டார்
அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வீட்டு வேலைக்காக மலேசியா சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்