நிட்டம்புவையில் பாரிய தீவிபத்து...!
கம்பஹா மாவட்டத்தில் கடையொன்றில் திடீரெனப் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
நிட்டம்புவை நகரிலுள்ள கடையொன்றிலேயே இன்று (23-10-2026) இரவு 7.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தீயணைப்பு வாகனங்கள்
தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக உடனடியாக மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுத் தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தபரவிவரும் தீயை அணைக்கவும் மற்றும் அருகிலுள்ள ஏனைய வணிகக் கட்டடங்களுக்குத் தீ பரவுவதைத் தடுக்கவும் மூன்று தீயணைப்பு எஞ்சின்கள் மற்றும் மீட்புக் குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இத் தீவிபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன் சம்பவத்தில் எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் எவையும் பதிவாகவில்லை என காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
15 சிறுவர்களின் உயிரைக் காக்க இலவச இதய சத்திரசிகிச்சைகள்: கராப்பிட்டியவில் களமிறங்கிய வெளிநாட்டு மருத்துவக் குழு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |