எகிப்தில் ஞாயிறு பிரார்த்தனையில் திடீர் தீ விபத்து -41 பேர் கருகி மாண்டனர்
Fire
Death
Egypt
By Sumithiran
தேவாலயத்தில் ஏற்பட்டதிடீர் தீ
எகிப்து தலைநகர் கெய்ரோவில், தேவாலயத்தில் ஏற்பட்டதிடீர் தீ விபத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தமை அப்பகுதி மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றுகொண்டிருந்தவேளை திடீரென மின்கசிவு ஏற்பட்டதால் தேவாலயம் தீப்பற்றி எரிந்தது.
விரைந்த தீயணைப்பு வீரர்கள்
இந்த தீவிபத்தில் சிக்கியே பிரார்த்தனையில் பங்குபற்றிய மக்கள் கருகி மாண்டனர்.
சம்பவத்தின் போது சுமார் 5,000 மக்கள் ஆராதனையில் ஈடுபட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தில் 45 பேர் காயங்களுடன் தப்பியுள்ளதாகவும், அவர்கள் காஸா மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மக்கள் அதிகம் வசிக்கும் அந்த பகுதிக்கு 15 தீயணைப்பு வாகனங்களில் விரைந்த தீயணைப்பு வீரர்கள் மேலும் தீயை பரவவிடாமல் கட்டுப்படுத்தினர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி