பூமிக்கு அருகில் வரவுள்ள வால் நட்சத்திரம் - 50000 ஆண்டுகளில் நிகழாத அதிசயம்(காணொளி)
விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகளில் வானில் 50000 ஆண்டுகளில் நிகழாத அதிசயம் முதன் முறையாக நிகழ உள்ளதாக நாசா நிறுவனம் அறிவித்துள்ளது.
சூரிய குடும்பத்தில் வியாழனின் சுற்றுப்பாதையில் சூரியனை சுற்றி வரும் வால் நட்சத்திரம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது.
சூரிய குடும்பத்தின் உள் வழியாக பயணித்து வரும் இந்த வால்நட்சத்திரம் வரும் வாரங்களில் பூமியை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பூமியைக் கடந்து செல்லும்
நிலையில் குறித்த வால்நட்சத்திரம் நாளை சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, பிப்ரவரி 2 ஆம் திகதி 42 புள்ளி 5 இலட்சம் கிலோமீட்டர் தொலைவில் பூமியைக் கடந்து செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வாழ் நட்சத்திரம் பூமிக்கு அருகில் வரும் நேரத்தில் மண்டலத்தில் காணப்படும் தூசிகள் மற்றும் துகள்களுடன் சேர்ந்து பச்சை நிறத்தில் தோன்றும் எனத் தெரிவித்துள்ளது.
☄️ A comet last in the solar system about 50,000 years ago should be visible in the morning sky this month, NASA reports. https://t.co/I0ELaVs26A pic.twitter.com/55EUsI1gkb
— NBC4 Washington (@nbcwashington) January 10, 2023