மகிந்த ,பசில் உள்ளே கோட்டாபய வெளியே(காணொளி)
அண்மையில் மொட்டு கட்சியின் பிரதான அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மொட்டு கட்சியின் பின்பக்க திரையில் ராஜபக்சாக்களின் முகங்கள் தோன்றியமை தொடர்பில் சில நெருக்கடிகள் எழுந்தன.
ஆரம்பத்தில் மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோரின் முகங்கள் காட்சிப்படுத்தப்பட்ட போதிலும், போராட்டத்தின் பின்னர் கோட்டாபய நாட்டைவிட்டு தப்பிச் சென்றதன் மூலம் அனைத்து ராஜபக்சக்களின் முகங்களும் காட்சிப்படுத்தப்படுவது இடைநிறுத்தப்பட்டது.
மீண்டும் மகிந்தவின் முகம்
மாறாக மொட்டு சின்னம் மாத்திரமே அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. எனினும், அது ஊடகங்களால் வெளிப்படுத்தப்பட்ட பின்னர், கடந்த வாரம் மகிந்த ராஜபக்சவின் முகம் மீண்டும் வெளிப்பட்டது.
இன்று, பசில் ராஜபக்ஷவின் முகம் அங்கு காட்சிப்படுத்தப்பட்டது. அதன்படி, அதில் இருந்து கோட்டாபய ராஜபக்சவின் முகம் மட்டும் நீக்கப்பட்டுள்ளது.
