யாழ் கெங்காதேவி துறைமுகத்தில் விபத்துக்குள்ளான படகு : கடற்றொழிலாளர்கள் குற்றச்சாட்டு

Jaffna Sri Lanka Sri Lanka Fisherman
By Sathangani Feb 25, 2025 09:35 AM GMT
Report

யாழ்ப்பாணம் (Jaffna) - கெங்காதேவி துறைமுகத்தை, அதிகாரிகள் தன்னிச்சையாக அபிவிருத்தி செய்து வருவதால் குறித்த பகுதியில் கடற்றொழிலாளரின் படகு ஒன்று விபத்துக்குள்ளாகிய நிலையில் ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் கடற்றொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கையில், “கடற்றொழில் அமைச்சின் மூலம் எமது கடற்றொழில் சங்கத்துக்கு 8 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டது.

8 இலட்சம் ரூபா வேலைத்திட்டத்திற்கான வரைபை நாங்கள் அதிகாரிகளிடம் சமர்ப்பித்தோம். இருப்பினும் அவர்கள் எமது திட்டத்தை புறந்தள்ளிவிட்டு தமது எண்ணத்திற்கு ஏற்றாற்போல் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதி அநுரவை நெருங்கும் ஆபத்து - எச்சரிக்கும் புலனாய்வு துறை

ஜனாதிபதி அநுரவை நெருங்கும் ஆபத்து - எச்சரிக்கும் புலனாய்வு துறை

அபிவிருத்தி பணிகள்

இதனால் ஆபத்து என்றும் நாங்கள் கூறினோம். ஆனால், கரையோர பாதுகாப்பு திணைக்கள பொறியியலாளரான கெங்காதரன் தர்சன் என்பவர் எமது திட்டவரைபை புறந்தள்ளிவிட்டு பழிவாங்கும் நோக்குடன் தனது விருப்பப்படி அபிவிருத்தியில் ஈடுபட்டார்.

யாழ் கெங்காதேவி துறைமுகத்தில் விபத்துக்குள்ளான படகு : கடற்றொழிலாளர்கள் குற்றச்சாட்டு | Fishermen Boat Accident In Jaffna Port

நாங்கள் கேள்வி கேட்ட காரணத்தால் அபிவிருத்தி பணிகளை 5 மீற்றர் தூரம் குறைத்து செய்யுமாறும் வேலை செய்பவர்களுக்கு கூறினார்.

இந்த நிலையில் இன்று காலை இருவர் படகு ஒன்றில் தொழிலுக்கு சென்றுவிட்டு திரும்பினர். இதன்போது அந்த அபிவிருத்தி செய்த இடத்தில் படகு மோதியதில் படகில் பயணித்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

கடவுச்சீட்டு விநியோகம் : அமைச்சர் வெளியிட்ட தகவல்

கடவுச்சீட்டு விநியோகம் : அமைச்சர் வெளியிட்ட தகவல்

வைத்தியசாலையில் அனுமதி 

அதில் 20 வயது இளைஞன் படுகாயமடைந்த நிலையில் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ் கெங்காதேவி துறைமுகத்தில் விபத்துக்குள்ளான படகு : கடற்றொழிலாளர்கள் குற்றச்சாட்டு | Fishermen Boat Accident In Jaffna Port

இதற்கு பிறகும் உரிய அதிகாரிகள் எமது கருத்தை கேட்காவிட்டால் விளைவுகள் பாரதூரமாக இருக்கும். எனவே உரிய அதிகாரிகள் விரைவில் இதனை கருத்தில் எடுத்து எமக்கு உகந்த வேலைத்திட்டத்தை, எமது வரைபடத்தின்படி செய்துதர வேண்டும்” என தெரிவித்தனர்.

ஜேவிபியில் ரில்வின் சில்வா போன்று தமிழரசில் சுமந்திரன் : கட்சியைக் கட்டுப்படுத்தும் தலைமைகள்

ஜேவிபியில் ரில்வின் சில்வா போன்று தமிழரசில் சுமந்திரன் : கட்சியைக் கட்டுப்படுத்தும் தலைமைகள்


செய்திகள் - பு.கஜிந்தன் 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026