எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு ஏற்றிவரப்பட்ட மீன்பிடி படகால் பரபரப்பு
Fuel Price In Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Fuel Crisis
By Sumithiran
எரிபொருள் தட்டுப்பாடு
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக மக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர்.
மேலும், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் நிரப்பும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
வாகனத்தில் ஏற்றிவரப்பட்ட மீன்பிடி
இந்நிலையில், அம்பலாங்கொடை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வாகனத்தில் ஏற்றிவரப்பட்டமீன்பிடி படகினால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கொள்கலனில் எரிபொருள் நிரப்பப்பட மாட்டாது என எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் மீன்பிடி படகின் உரிமையாளருக்கு அறிவித்துள்ளதாகவும் அதன் பிரகாரம் அவர் தனது படகை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனாலேயே அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

