பதவி நீக்கப்பட்டுள்ள ஐந்து நீதிபதிகள்: வெளியாகியுள்ள தகவல்
இலங்கை நீதித்துறை சேவை ஆணைக்குழுவினால் ஒரு வாரத்திற்குள் ஐந்து நீதிபதிகள் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அரசு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இடைநீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளில் மொரட்டுவ நீதவான் திலின கமகே, மஹியங்கனை மேலதிக மாவட்ட நீதிபதி ரங்கனி கமகே மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று நீதிபதிகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பணியில் உள்ள நீதிபதிகள்
இந்த நிலையில், நீதித்துறை சேவை ஆணைக்குழுவின் தலைவராக பிரதம நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன உள்ளதோடு, உயர் நீதிமன்ற நீதிபதி மஹிந்த சமயவர்தன உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.
மேலும், நீதிபதி காமினி அமரசேகர ஓய்வு பெற்றதால் வெற்றிடமாக உள்ள மூன்றாவது இடத்தை அரசியலமைப்பு சபை இதுவரை நிரப்பவில்லை என்று கூறப்படுகிறது.
அத்துடன், உயர் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன அல்விஸ் தற்போது ஆணைக்குழுவின் செயலாளராக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
