சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க ஐந்து அம்ச நடவடிக்கை - ரிசி சுனக் அதிரடி நடவடிக்கை
சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க ஒரு புதிய ஐந்து அம்ச மூலோபாயத்தை பிரித்தானிய பிரதமர் ரிசி சுனக் (Rishi Sunak) வகுத்துள்ளார்.
இதன்படி, அடுத்த ஆண்டு இறுதிக்குள் அரசாங்கத்தின் புகலிட விண்ணப்பங்களை நிறுத்துவதாக அவர் உறுதியளித்துள்ளார்.
மேலும், ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் சிறிய படகுகளைக் கண்காணிக்க புதிய பிரிவுக்கு நூற்றுக்கணக்கான கூடுதல் பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டங்களை சுரண்டும் கும்பல்
சட்டவிரோதமாக மக்கள் இங்கு வருவது நியாயமற்றது. உண்மையான புகலிடக் கோரிக்கை உள்ளவர்களுக்கு இது அநியாயம் ஆகும் என்று ரிசி சுனக் (Rishi Sunak ) தெரிவித்துள்ளார்.
மனித அவலத்தை வியாபாரம் செய்யும் மற்றும் சட்டங்களை சுரண்டும் கும்பல்களின் கழுத்தை நெரிப்பதை உடைக்க விரும்புவது கொடூரமானது அல்லது இரக்கமற்றது அல்ல.
தற்போது கட்டமைக்கப்பட்டுள்ள உலகளாவிய புகலிடக் கட்டமைப்பு காலாவதியாகிவிட்டது, என்று அவர் கூறினார்.
அரசாங்கத்தின் ஐந்து அம்ச நிகழ்ச்சி நிரல், சுனக் மற்றும் அவரது உள்துறைச் செயலர் சுயெல்லா பிரேவர்மேன் ஆகியோரால் வகுக்கப்பட்டதாகக் கூறினார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா
