உலகளவில் அதிகளவில் இரத்து செய்யப்படவுள்ள விமான சேவைகள்
Russo-Ukrainian War
Ukraine
Flight
By Sumithiran
விமான டிக்கெட் விலை கணிசமாக உயரும்
சர்வதேச அளவில் எரிபொருள் விலை உயர்வால், விமான டிக்கெட் விலை கணிசமாக உயரும் என சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் எச்சரித்துள்ளது.
சங்கத்தின் தலைமை இயக்குனர் வில்லி வால்ஷ், உக்ரைன்-ரஷ்யா நெருக்கடி இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று சுட்டிக்காட்டுகிறார்.
சில மாதங்களில் வடக்கு அரைக்கோளத்தில் குளிர்காலம் வருவதால், விமான டிக்கெட் விலை கணிசமாக அதிகரிக்கும் என்று அவர் குறிப்பிடுகிறார்.
விமான சேவைகள் இரத்து
இதற்கிடையில், உலகின் பல நாடுகளில் உள்ள விமான நிலையங்களில் விமான சேவைகள் இரத்துசெய்யப்படுவது அதிகரிக்கும் என்று வில்லி வால்ஷ் கணித்துள்ளார்.
போதிய எரிபொருளை கொள்வனவு செய்ய முடியாமையே இதற்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
