கொழும்பின் சில பகுதிகளில் விசேட சோதனை : நூற்றுக்கணக்கானோர் கைது
புதிய இணைப்பு
ராகம, ஜா-எல, கந்தானை மற்றும் வத்தளை பகுதிகளில் காவல்துறையினர், விசேட அதிரடிப்படை, இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையினர் இணைந்து நடத்திய கூட்டு சோதனை நடவடிக்கையில் 300இற்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
கொழும்பின் (Colombo) புறநகர் பகுதிகளான ராகம, கந்தானை மற்றும் வத்தளை பகுதிகளுக்கு நேற்று (04) இரவு இராணுவம் மற்றும் காவல்துறையினரை அவசரமாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.
குறித்த பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நேற்று (04) இரவு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, இராணுவம், கடற்படை, விசேட அதிரடிப்படை மற்றும் காவல்துறையினர் இணைந்து அனைத்து வீதிகளையும் வாகனங்களையும் மக்களையும் சோதனை செய்தனர்.
துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்
கடந்த 3 ஆம் திகதி, ராகம மற்றும் கந்தானை பகுதிகளில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில், இதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.
இதன் விளைவாக, இந்தப் பகுதிகளில் திடீர் சுற்றிவளைப்பு உட்பட தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
