இரத்து செய்யப்பட்டிருந்த டுபாய் விமான சேவை மீண்டும் ஆரம்பம்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் (United Arab Emirates) நிலவும் மோசமான காலநிலை காரணமாக கடந்த 2 நாட்களாக இரத்து செய்யப்பட்டிருந்த விமானங்கள் தற்போது முனையம் 1-ல் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அடுத்த 24 மணித்தியாலங்களில் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமான போக்குவரத்து முழு செயற்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை
இது தொடர்பில் துபாய் சர்வதேச விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த 16ஆம் திகதி பெய்த வரலாறு காணாத மழையால் அமீரகம் வெள்ள நீரில் தத்தளித்தது.
கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழை பெய்ததால் பல முக்கிய சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
விமான சேவை ஆரம்பம்
விமான ஓடுபாதையில் சூழ்ந்த வெள்ளம் காரணமாக விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நேற்று (18)காலை முதல் விமான நிலையத்தின் முனையம் 1-ல் பகுதி செயல்பாடுகள் மீண்டும் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |