மே தின கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி பக்கம் தாவிய மொட்டு எம்.பி
Monaragala
Ranil Wickremesinghe
Sri Lanka Podujana Peramuna
UNP
By Dilakshan
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கயாஷான் நவனந்த ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கொழும்பு மாளிகாவத்தையில் நடைபெறுகிறது.
இந்நிலையில், பொதுஜன பெரமுனவின் மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கயாஷான் நவனந்த இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளார்.
மொட்டுக் கட்சி
குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறிது காலம் சுகாதார இராஜாங்க அமைச்சராகவும் பணியாற்றியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பொதுஜன பெரமுன (மொட்டுக்) கட்சியின் மேதினக் கூட்டம் இன்று (01.05.2024) பொரளை கெம்பல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |