ஈஸ்டர் தாக்குதலின் மூளையாளர்! மீண்டும் கவனம் பெறும் மைத்திரியை விரல் நீட்டிய கருத்து

2019 Sri Lanka Easter bombings Easter Attack Sri Lanka
By Dharu Feb 26, 2026 11:17 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் 2012 ஆம் ஆண்டு முதல் துவான் சுரேஷ் சாலேவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட விடயம் தொடர்பில் பீல்ட் மார்ச்ல் சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்துக்கள் தற்போது கவனம் பெற்றுள்ளன.

இந்த கருத்துக்களை, ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் அவர் தெரிவித்ததாகவும் இதில் கூறப்பட்டது.

சரத் பொன்சேகா 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இந்த விடயம் தொடர்பில் விளக்கியிருந்தார்.

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை தடுக்க முயற்சிக்க வேண்டாம்! வெளியான அறிவிப்பு

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை தடுக்க முயற்சிக்க வேண்டாம்! வெளியான அறிவிப்பு

பொன்சேகாவின் உரை

நேற்று காலை  சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சரத் பொன்சேகாவின் உரை அடங்கிய குறித்த காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலின் மூளையாளர்! மீண்டும் கவனம் பெறும் மைத்திரியை விரல் நீட்டிய கருத்து | Did Maitreya Mastermind The Easter Attacks

அன்று அவர் தெரிவித்த கருத்தில் இருந்து,

“இறுதி போர் முடிந்த கையோடு 2010 ஆம் ஆண்டின் பின்னர் சஹ்ரான் புலனாய்வு பிரிவில் இணைந்து செயற்பட்டார்.

கோட்டாபயவுடன் மிகவும் நெருக்கமாக செயற்பட்டவர். இராணுவ புலனாய்வு துறையின் பிரதானியாக சுரேஷ் சாலே செற்பட்டபோது சஹ்ரான் எவ்வித பயமும் இல்லாமல் செயற்பட்டார்.

ஆனால் நான் சாலேவை தள்ளி வைத்தே செயற்பட்டேன். தமிழ் தெரிந்ததாலே அவரை புலனாய்வு பிரிவில் சேர்ந்துக் கொண்டுள்ளனர். கோட்டாபயவுக்கு விசுவாசமானவராக செயற்பட்டவர்.

2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் அன்று வவுனியா மற்றும் கிழக்கு மாகாணங்களில் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது.

சுரேஷ் சலே கைது : முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரிக்காக நீதிமன்றில் முன்னிலையான அலி சப்ரி

சுரேஷ் சலே கைது : முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரிக்காக நீதிமன்றில் முன்னிலையான அலி சப்ரி

சுரேஷ் சாலே

அப்போது சுரேஷ் சாலே வவுனியாவில் இருந்து கொண்டு இதை செய்துள்ளார். மைத்திரிபால சிறிசேன இந்தியாவில் இருக்கும் போது சுரேஷ் சாலே அவரை சந்தித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலின் மூளையாளர்! மீண்டும் கவனம் பெறும் மைத்திரியை விரல் நீட்டிய கருத்து | Did Maitreya Mastermind The Easter Attacks

ஈஸ்டர் குண்டு தாக்குதலில் சாலே மத்தியில் இருந்து செயற்பட்டவர். அதனால் பிரதான சூத்திரதாரி இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய Channel 4 ஆவணப்படத்தை மையமாகக் கொண்டு நடைபெற்ற ஒத்திவைப்பு விவாதத்தின் போது, 

“ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் இரண்டு மூளையாகச் செயல்படுபவர்கள் உள்ளனர். ஒருவர் கோட்டாபய, மற்றவர் மைத்திரிபால சிறிசேன.

சாலே ஒரு நடுநிலை நபர் மட்டுமே. இப்படிப்பட்ட தாக்குதலை திட்டமிடும் திறன் அவருக்கில்லை. குண்டுகள் வெடித்த போது இவர் (சிறிசேன) சிங்கப்பூரில் இருந்தார்.

நாட்டிற்கு திரும்புவதில் தாமதித்த கோழை. எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தபோது திருடன் போல வந்து சேர்ந்தார்.

சுரேஷ் சாலேயின் அதிரடி கைது - அரசின் மீது பாயும் கடும் விமர்சனங்கள்

சுரேஷ் சாலேயின் அதிரடி கைது - அரசின் மீது பாயும் கடும் விமர்சனங்கள்

எவ்வளவு பெரிய பொய்

இவரைப் போல கோழையான தலைவர் இந்த நாட்டில் இருந்ததில்லை. நாங்கள் இவரைப் பற்றி வெட்கப்படுகிறோம்.”

(இதற்கிடையில் சிறிசேனா, குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தி இடையூறு செய்தார்.)

பொன்சேகா 

“நீங்கள் பின்னர் பதிலளிக்கலாம். என் பேச்சை முடிக்கும் வரை காத்திருக்கவும்.”

சிறிசேன

“நான் திருப்பதியில் சல்லேயை ஒருபோதும் சந்திக்கவில்லை. திருப்பதி ஒரு பக்கம்; சhலே எனது பயண விவரங்களை அறிந்தவரும் இல்லை.

பொன்சேகா பழக்கப்பட்ட பொய்யர். இவர் இராணுவத் தளபதியாக இருந்தபோது, அவரது முகாமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் ஆயிரக்கணக்கான படைவீரர்கள் உயிரிழந்தனர்.

பொன்சேகா 

இவர் ஒரே கதையைத் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார். முகாம் பாதுகாப்பிற்கு இராணுவத் தளபதி பொறுப்பல்ல. இப்போது இவர் காரணமற்ற முறையில் நடந்து கொள்கிறார்.

இத்தகைய நடத்தை ஒரு முன்னாள் அரசுத் தலைவருக்கு ஏற்றதல்ல.

2015 இல் நாங்கள் இவருக்கு ஆதரவு அளித்தோம். இன்று அதற்கு வருந்துகிறோம்.

சிறிசேன

எவ்வளவு பெரிய பொய்யன் இவர்!

இவர் இராணுவத் தளபதியாக இருந்தபோது ஆயிரக்கணக்கான எங்கள் படைவீரர்கள் கொல்லப்பட்டனர். அதைப் பற்றி இவர் ஒருபோதும் பேசுவதில்லை.

பாதுகாப்பு தலைமையகத்தைக் கூட காக்க முடியவில்லை. இவர் தற்கொலை குண்டுதாரியின் இலக்காகவும் இருந்தார். இப்போது தேசிய பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்.

பொன்சேகா:

“போரின்போது சுமார் 5,000 படைவீரர்கள் உயிரிழந்தனர். ஆனால் நாங்கள் 25,000-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை ஒழித்தோம்.

அப்படித்தான் நாம் போரைக் முடித்தோம். என விவாதம் இடம்பெற்றிருந்தது.

பல ஆதாரங்களுடன் சிக்கிய சுரேஷ் சாலே: அச்சத்தில் ராஜபக்‌சர்கள் - அடுத்த முக்கிய இலக்கு...!

பல ஆதாரங்களுடன் சிக்கிய சுரேஷ் சாலே: அச்சத்தில் ராஜபக்‌சர்கள் - அடுத்த முக்கிய இலக்கு...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026