கொழும்பு - புத்தளம் வீதியில் வெள்ளப்பெருக்கு: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
Colombo
Puttalam
Floods In Sri Lanka
By Aadhithya
லுனு ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக கொழும்பு (Colombo) - புத்தளம் வீதியின் மஹா ஓயா பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இது தொடர்பாக புத்தளம் (Puttalam) அனர்த்த முகாமைத்துவ நிலையம் அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் கொழும்பு - புத்தளம் வீதிக்கு அருகிலுள்ள லுனு ஓயா பாலம் முற்றாக நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நீரின் மட்டம் அதிகரிக்கும் அபாயம்
மேலும், பிற்பகல் வேளையில் நீரின் மட்டம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக வீதியில் பயணிக்கும் போது மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

10ம் ஆண்டு நினைவஞ்சலி