டயானா கமகே பிணையில் விடுதலை...! நீதிமன்றம் உத்தரவு
புதிய இணைப்பு
நீதிமன்றில் முன்னிலையான முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை (Diana Gamage) பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் (Colombo Fort Magistrate Court) உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, சந்தேகநபரை ஐந்து இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும், தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுதலை செய்ய உத்தரவிட்ட நீதவான், பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகளுக்கு பாதகமான கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறும் சந்தேக நபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து தரப்பினரும் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே ( Dilina Gamage) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள்
இந்த பிரேரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போது குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் (CID) நீதிமன்றில் முன்னிலையாகவில்லை.
பொய்யான தகவல்களைச் சமர்ப்பித்து இலங்கைப் பிரஜாவுரிமை இன்றி கடவுச்சீட்டு பெற்ற சம்பவத்தில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளடயானா கமகே, சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலையாகிதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்
முதலாம் இணைப்பு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே (Diana Gamage) நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் (CID) தேடுதலுக்கு பயந்து தலைமறைவாகியதாக ஊடகங்களில் பரவும் செய்திகளுக்கு பதில் வழங்கவே டயானா கமகே மன்றில் முன்னிலையானார் என அவரது சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
அவர் தனது சட்டத்தரணிகளுடன் இணைந்து கோட்டை நீதவான் நீதிமன்றில் (fort magistrate court) பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களம்
இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்றமை தொடர்பான வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே (Diana Gamage) தலைமறைவாகியள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு பிரதான நீதவானிடம் நேற்று தெரிவித்திருந்தனர்.
டயானா கமகேவை சந்தேகநபராக பெயரிட்டு குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் (CID) கொழும்பு பிரதான நீதவான் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
இதனடிப்படையில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், டயானா கமகேவை குற்றப் புலனாய்வு திணைக்களம் (Criminal Investigation Department) சந்தேக நபராக பெயரிட்டிருந்தது.
மேலும், கொழும்பு பிரதான நீதவானிடம் குற்றஞ்சாட்டப்பட்டவர் தனது இல்லத்தில் இருந்து காணாமல் போயுள்ளதாகவும் கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |