சோமாலியாவில் வெள்ளப்பெருக்கு : 96 பேர் பலி : அவசர நிலை அறிவிப்பு
சோமாலியாவில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கினால் 96பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இதுவரையிலும் 2,50,000 இற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.
கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக, சோமாலியாவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்
ஏற்கனவே ஆபிரிக்க அமைப்பான அல் ஷபாப்புக்கும் சோமாலியா அரசு படைகளுக்கும் நடந்து வரும் மோதலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்கள், இந்த வெள்ளத்தினால் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறார்கள்.
அங்கிருந்து வரும் தகவலின் படி, ஷபல்லே(Shabelle) நதியில் ஏற்பட்ட வெள்ளத்தினால், பெலட்வைன்(Beledweyne) நகரம் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.
இதனால் சோமாலிய எதியோப்பிய எல்லையில் இருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |