பிரித்தானியாவில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண்
பிரித்தானியாவின் பிளாக்பூல் பகுதியில் பெண் ஒருவர் பலதரப்பட்ட காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ரெட்கார் சாலைக்கு சந்தேகத்திற்கிடமான வகையில் ஏற்பட்ட இறப்பு குறித்த நிகழ்விற்காக காவல்துறையினர் வியாழக்கிழமை 11 மணிக்கு முன்னதாக அழைக்கப்பட்டனர்.
பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதை தொடர்ந்து காவல்துறையினர் தற்போது கொலை விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தீவிர விசாரணை
அத்துடன் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் சடலமாக மீட்கப்பட்டவர் அலிசன் டாட்ஸ்(Alison Dodds) என்ற பெண் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தினை தொடர்ந்து காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அத்துடன் மோசமான இந்த நிகழ்வு குறித்து தங்களது விசாரணை குழு தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர் என லங்காஷயர்(Lancashire) காவல் துறையின் துப்பறியும் தலைமை காவலர் ஜேன் வெவ் தெரிவித்துள்ளார்.
