பெண்ணை வேட்டையாடிய 13 அடி முதலை: சுட்டுக் கொன்ற புளோரிடா அதிகாரிகள்
அமெரிக்காவின் தென்கிழக்கில் உள்ள மாநிலம் புளோரிடாவில் ரிட்ஜ்க்ரெஸ்ட் பகுதியில் 13 அடி நீள முதலை ஒன்று சுட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ரிட்ஜ்க்ரெஸ்ட் பகுதியில் 121-வது தெருவிற்கும் 134-வது வடக்கு நிழற்சாலைக்கும் அருகில் உள்ள நீர்நிலையில் ஒரு 13-அடி நீள முதலை தென்பட்டுள்ளது.
இந்நிலையில் அப்பகுதி மக்கள் புளோரிடா அதிகாரிளுக்கு குறித்த தகவலை தெரியபடுத்தியுள்ளனர்.
விசாரணை
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் முதலையை பார்வையிட்டதன் பின்னர் அதன் வாயில் ஒரு மனித உடலின் பாகம் இருப்பது தெரி்யவந்துள்ளது.
அதனை தொடர்ந்து தலைமை அதிகாரியின் உத்தரவின் பின்னர் அம்மாநில மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆணைய அதிகாரிகளால் இந்த முதலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது.
அதேவேளை விசாரணையில், இறந்தது 41 வயதான சப்ரீனா பெக்காம் எனும் பெண்மணி என தெரிய வந்துள்ளது.
சில மணி நேரம் நடைபெற்ற இந்த சம்பவத்தை நேரில் பார்வையிட்ட அப் பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.