ஏழு வருட பணியை முடித்து பூமிக்கு திரும்பிய ரோபோ
சூரிய குடும்பத்தில், நாசாவின் ஒசிரிஸ் ரெக்ஸ் என்ற ரோபோ ஆய்வு, மில்லியன் கணக்கான கிலோமீட்டர் தொலைவில் சென்று, பென்னு என்ற கிரகத்தை நெருங்கி, கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து மண்ணையும் தூசியையும் சேகரித்து, அதன் ஏழு ஆண்டு பணியை முடித்து பூமிக்கு திரும்பியது.
சேகரிக்கப்பட்ட பென்னுவின் மண் மற்றும் தூசி ஒசைரிஸ் ரெக்ஸ் என்கின்ற விண்கலத்தில் இணைக்கப்பட்ட சிறிய கேப்ஸ்யூலில் வைக்கப்பட்டதன் பின்னர் ரோபோ, தனக்கு கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி, பூமிக்கு அருகில் வந்து கேப்சூலை பூமியை நோக்கி விடுவித்துள்ளது.
கேப்ஸ்யூல் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து பூமியின் வளிமண்டலத்தின் வழியாக அதிவேகமாக, அமெரிக்காவின் யூடா பாலைவனத்தில் தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பூமியை விட பழமையானது
அதேவேளை இந்த மண்ணும் தூசும் பூமியில் உயிர்களின் தோற்றம் பற்றிய ரகசியங்களை வெளிக்கொணரவும் உதவும் என நாசா விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
பென்னு என்ற சிறுகோள் செப்டம்பர் 11, 1999 அன்று கண்டுபிடிக்கப்பட்டது.
500 மீட்டர் அகலம் கொண்ட பென்னு என்ற சிறுகோளை 2016ல் ஒசிரிஸ் ரெக்ஸ் ரோபோ பார்வையிட்டது.
பென்னு என்ற சிறுகோள் பூமியை விட பழமையானது எனவும் சூரிய குடும்பத்தின் பிறப்பு மற்றும் பரிணாமம் பற்றிய ஆய்வுக்கு அதன் ரகசியங்களை தெரிந்துக்கொள்வது மிகவும் முக்கியமானது என்றும் நாசா கூறுகிறது.


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
3 நாட்கள் முன்