காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை: வெளியான அறிவிப்பு
Jaffna
Sri Lanka
India
Ship
Nagapattinam
By Kajinthan
காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையானது எதிர்வரும் 06.03.2025 அன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுபம் கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
குறித்த கப்பல் சேவையானது அசாதாரண காலநிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டது. இந்நிலையில் கப்பல் சேவையானது மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பயணச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ளும் முறை
அத்துடன் வழமைபோல் செவ்வாய்க்கிழமை தவிர்ந்த ஏனைய ஆறு நாட்களும் குறித்த கப்பல் சேவையானது இடம்பெறும். www.sailsubham.com என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதனூடாகவோ அல்லது 0212224647, 0117642117 என்ற இலக்கங்களுக்கு அழைப்பு மேற்கொள்வதன் மூலமாகவோ பயணச்சீட்டுகளை பதிவுசெய்துகொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி